உணவகமொன்றில் தீ: ஐவர் காயம்

கண்டி கலஹா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சமையல் தீ பரவல் ஏற்பட்டு 5 பேர் காயம் அடைந்துள்ளனர்.

சமையல் எரிவாயு கசிவு காரணமாக தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.