உணவகத்தில் வாடிக்கையாளர்கள் மீது தாக்குதல் 11 ஊழியர்கள் கைது
காலியில் உள்ள ‘இந்தியன் ஹட்’ உணவகத்தின் முகாமையாளர் உட்பட 11 ஊழியர்கள் சேர்ந்து குடும்பமாக உணவு உட்கொள்ள வந்த வாடிக்கையாளர்களைத் தாக்கியதாகக் தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் ஏப்ரல் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 16ஆம் திகதி இரவு, குறித்த உணவகத்துக்கு குடும்பமாக வந்திருந்தவர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட உணவு வழங்களில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது.
இந்த சம்பவத்தில் கொழும்பைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரும், 17 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறார்களும் உள்ளடங்கலாக 06 பேர் காயமடைந்து காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
விசாரணைகளைத் தொடர்ந்து, தாக்குதலில் தொடர்புடைய 11 சந்தேக நபர்களை பொலிஸார் அடையாளம் கண்டு கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, ஏப்ரல் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில்ட காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.