உணவகத்தில் பாரிய தீ பரவல்

வெலிகந்தையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

குறித்த திடீர் தீ பரவல் இன்று புதன்கிழமை காலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன்,  தீ பரவலில் உயிர் தேசம் எதுவும் ஏற்படவில்லை என வெலிகந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தீயினால் ஏற்பட்ட சேத விபரம் இதுவரையில் மதிப்பிடப்படவில்லை.

எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பில் வெலிகந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.