உணவகத்தில் குளிர்பானம் அருந்திய யுவதி வைத்தியசாலையில் அனுமதி!

கொழும்பு-பீப்பிள்ஸ் பூங்காவில் உள்ள உணவகத்தில் குளிர்பானம் அருந்திய 19 வயது யுவதி ஒருவர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி குறித்த யுவதி தனது தாயுடன் பீப்பிள்ஸ் பூங்காவில் உள்ள உணவகத்தில் உணவருந்தியபோது ​​​​போத்தலில் அடைக்கப்பட்ட குளிர்பானம் ஒன்றை வாங்கி அருந்தியுள்ளார்.

குளிர்பானத்தை அருந்தியவுடன் குறித்த யுவதி வாந்தி எடுக்க ஆரம்பித்துள்ளார். அதன்பின் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவர் தீவிர சிகிச்சைக்காக தேசிய தொற்று நோய் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த உணவகத்தில் குளிர்பான போத்தல்களை மீள்சுழற்சி செய்து அவற்றில் தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட பானங்கள் நிரப்பப்பட்டு மீண்டும் மீண்டும் விற்பனை செய்து வந்தது பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் அளித்த புகாரின் அப்படையில் குறித்த உணவகத்தின் மூன்று ஊழியர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்த பொலிஸார் இரசாயனம் கலந்த குளிர்பான போத்தல்களை அங்கிருந்து பறிமுதல் செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.