உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை அதிபர் ரொசானா மதுரமதி குலேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

மாணவ தலைவியாக தருணியும், விளையாட்டுத் தலைவியாக சுஜித்தாவும், சிரேஸ்ட மாணவ தலைவிகளாக டிறோசினி, பதுமிதா, அபிஷா, கம்சத்வேணி ஆகியோரும், விடுதி தலைவியாக புரட்சி தெரிவாகி சின்னம் சூட்டப்பட்டது.

ஏனையவர்களுக்கும் அதிபரினால் சின்னம் சூட்டப்பட்டது.