உடல் துர் நாற்றத்தை போக்க சில எளிய வழிகள்
உடல் துர் நாற்றத்தை போக்க சில எளிய வழிகள்
உடல் துர் நாற்றத்தை போக்க சில எளிய வழிகள்
🟠நாம் அனைவருமே நல்ல மணத்துடன் இருக்க வேண்டுமென்று விரும்புவோம். அதற்காக நன்கு குளித்து விட்டு, நல்ல வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துவோம். ஆனால் வாசனைத் திரவியங்களில் உள்ள பாராபீன்கள் மற்றும் அலுமினியம் போன்றவை உடலக்கு பல வழிகளில் தீங்கு விளைவிப்பதாக கூறப்படுகிறது. அதோடு சிலருக்கு வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்தினால், அக்குளில் ஒருவித அரிப்பு ஏற்படக்கூடும். இதற்கு அவற்றில் உள்ள கெமிக்கல்கள் தான் காரணம்.
🟠சரி, உடலில் இருந்து வீசும் வியர்வை நாற்றத்தை போக்குவதற்கு சிறந்த மாற்றாக நம் வீட்டு சமையலறையிலேயே ஒருசில பொருட்கள் உள்ளன. இந்த இயற்கை பொருட்கள் வியர்வை நாற்றத்தைப் போக்குவதோடு, சருமத்திற்கும் பாதுகாப்பானது மற்றும் எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. அந்தவகையில் வியர்வை நாற்றத்தைக் கட்டுப்படுத்த உதவும் வீட்டுப் பொருட்கள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
📌தக்காளியும் அதிகப்படியான வியர்வையைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. அதோடு இது சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களையும் அழிக்கக்கூடியது. எனவே உங்கள் மீது வியர்வை நாற்றாம் அதிகமாக வீசினால், தக்காளி சாற்றினை ஒரு துணியில் நனைத்து பிழிந்து அக்குள் மற்றும் வியர்வை துர்நாற்றம் வீசும் பிற இடங்களில் சிறிது நேரம் வைத்திருங்கள். பின் அக்குளைக் கழுவுங்கள். இச்செயலால் சருமத் துளைகள் மூடப்பட்டு, அதிக வியர்வை உற்பத்தியாவது தடுக்கப்படும்.
📌எலுமிச்சை சாற்றில் உள்ள அசிட்டிக் அமிலம் இயற்கையாக ஆன்டி-பாக்டீரியல் தன்மை கொண்டவை. எனவே எலுமிச்சை சாற்றினை ஒரு பஞ்சுருண்டையில் நனைத்து, அக்குள் மற்றும் உங்களுக்கு அதிகம் வியர்க்கும் பகுதியில் தடவினால், வியர்வை நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரிக்கள் அழிக்கப்பட்டு, உடலில் அதிகமாக வியர்வை நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.
📌கல் உப்பில் சுத்தப்படுத்தும் பண்புகள் உள்ளதால், இது வியர்வையை தடுப்பதோடு, வியர்வை நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களையும் அழிக்கும். அதற்கு சிறிது கல் உப்பை வெதுவெதுப்பான நீரில் போட்டு, நன்கு கரைந்த பின் அந்நீரால் குளிக்க வேண்டும். இதனால் வியர்வை கட்டுப்படுவதோடு, உடல் துர்நாற்றமும் தடுக்கப்படும்.
📌சமையலறையில் காணப்படும் மற்றொரு பொதுவான பொருள் தான் பேக்கிங் சோடா. இது சமையல் பொருள் மட்டுமின்றி, சுகாதார பொருளும் கூட. இத்தகைய பேக்கிங் சோடாவை சிறிது எடுத்து நீர் சேர்த்து கலந்து, அக்குளில் தடவி நன்கு காய வைக்க வேண்டும். இல்லாவிட்டால், ஒரு பங்கு பேக்கிங் சோடாவுடன், 6 பங்கு சோள மாவு சேர்த்து கலந்து, அதை அக்குளில் பவுடர் போன்று தடவிக் கொள்ளலாம்.
📌சுத்தமான தேங்காய் எண்ணெயில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகள் உள்ளதால், இது வியர்வை நாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் சிறந்தது. அதற்கு தேங்காய் எண்ணெயை குளித்த பின் அக்குளில் தடவி, பின் உடையை உடுத்த வேண்டும். மற்றொரு வழி, தேங்காய் எண்ணெயை பேக்கிங் சோடாவுடன் சேர்த்து கலந்து, அந்த பேஸ்ட்டை அக்குளில் தடவலாம். இல்லாவிட்டால் பேக்கிங் சோடா மற்றும் சோள மாவை சரிசம அளவில் எடுத்து, தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, ஃப்ரிட்ஜில் வைத்து விட வேண்டும். பின் அந்த கலவையை தினமும் குளித்து முடித்த பின் அக்குளில் தடவவும்.
📌க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் மற்றும் நச்சு நீக்கும் பண்புகள் உள்ளதால், இது வியர்வை நாற்றத்தைப் போக்கவும் உதவி புரியும். அதற்கு வெதுவெதுப்பான நீரில் க்ரீன் டீ பைகளை வைத்து ஊற வைத்து, பின் அந்த பைகளை அதிகம் வியர்க்கும் அக்குளில் ஒரு 5 நிமிடம் வைத்து, பின் அக்குளைக் கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், அக்குளில் அதிகம் வியர்ப்பது குறைந்து, உடல் துர்நாற்றமும் குறையும்.
உடல் துர் நாற்றத்தை போக்க சில எளிய வழிகள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்