
உடல் சிதைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
அம்பாறை மாவட்டத்தின் அஹுங்கல்ல, எகொடமுல்ல பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை வீட்டில் தனியாக வசித்து வந்த பெண் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அஹுங்கல்ல, எகொடமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலம் தெரிய வருகையில்,
உயிரிழந்த பெண்ணை பல நாட்களாக காணவில்லை எனவும் அவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள் வழங்கிய முறைப்பாட்டின்படி பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, குறித்த பெண் வீட்டினுள் நாற்காலியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதன் போது அவரது உடல் மிகவும் சிதைந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர், பலபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
