
பழஞ்சோறு அல்லது பழைய சோறு என்பது முந்தைய நாள் வடித்த சோற்றில் தண்ணீர் ஊற்றி மறுநாள் உண்ணும் உணவாகும். சோறு வீணாவதைத் தடுக்க இவ்வாறு செய்கின்றார்கள். நொதித்த உணவு வகைகளுள் ஒன்றான இது பொதுவாக, உழவர்கள், பாட்டாளிகள், அடித்தட்டு மக்களின் உணவாகவும் உள்ளது.
இதனை உட்க்கொண்டு வந்தால் கிடைக்கும் நன்மைகளினை தெரிந்து கொள்ளுங்கள் .
பழைய சோற்றில் வேறு எந்த உணவுப் பொருட்களிலும் கிடைக்காத விற்றமின் பி11, பி12 ஆகிய சத்துக்கள் நிரம்பியுள்ளன.
பழைய சோற்றில் இலட்சக்கணக்கான பக்டீரியாக்கள் நிரம்பியுள்ளதால், இதனை உட்க்கொள்வதன் மூலம் செரிமான பிரச்சினைகளினை நீக்குவதுடன், செரிமான மண்டலத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் .
மாலையில் இதைச் சாப்பிடுதால்,வயிறு தொடர்பான நோய்கள் குணமாகின்றது. உடலில் அதிகமாக இருக்கும் உஷ்ணத்தையும் போக்குகிறது.
இந்த உணவு, நார்ச்சத்து தன்மையினைக் கொண்டிருப்பதால், மலச்சிக்கலை நீக்கும்.உடல் சோர்வையும் விரட்டும்.
உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தணியச்செய்ய இந்த பழைய சோறு உதவுகின்றது.
எனவே இவ்வாறான நன்மைகளினைக் கொண்ட பழைய சோற்றினை உட்க்கொண்டு அதனால் கிடைக்கக் கூடிய நன்மைகளினைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
