உடலூறவின் போது ஆணுறையில் துளையிட்ட பெண்ணுக்கு 6 மாதம் சிறை

ஜேர்மன் நாட்டு பெண் ஒருவர் தனது ஆண் நண்பனுடன் உடலுறவில் ஈடுபடும் போது ஆணுறையில் துளையிட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்ட நிலையில் , பெண்னுக்கு நீதிமன்றத்தால் 6 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

39 வயதான குறித்த பெண் உடல் உறவில் இருந்தபோது, அவருக்குத் தெரியாமல் ஆணுறையை வேண்டுமென்றே சேதப்படுத்தி கருத்தரிக்க முறற்சி செய்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இந்த வழக்கானது “சட்ட வரலாற்றை உருவாக்கியது” ஏனெனில் “திருட்டுத்தனம்” இங்கு இடம்பெற்றுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

2021 இன் தொடக்கத்தில் ஆன்லைனில் சந்தித்து சாதாரண, பாலியல் உறவைத் தொடங்கியதாகவும் , ஆனால் 42 வயதான ஆண் நண்பர் தன்மீது ஆழமான உணர்வுகளை வளர்த்துக் கொண்டார், ஆனால் அவர் உறுதியான குடும்ப உறவில் இருக்க விரும்பவில்லை என குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்தான் கர்ப்பம் தரிக்க வேண்டும் என்ற நோக்கில் , இரகசியமாக ஆணுறையில் துளையிட்டு கர்ப்பம் தரிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் , ஆனால் அது பலனளிக்கவில்லை என்றும் பெண் தெரிவித்துள்ளார்.

தனது காதலனை ஏமாற்ற திட்டமிட்ட அந்த பெண், வாட்ஸ் ஆப் மூலம் நான் உடலூறவின் போது உங்கள் ஆணுறையில் துளை போட்டுவிட்டேன் அதனால் தற்போது கர்ப்பமாக உள்ளேன் என பொய்யான தகவல் அனுப்பியுள்ளார்.

பெண்ணின் தகவலையடுத்து அதிர்ச்சி அடைந்தவர் பெண் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த விசித்தரமான வழக்கை எவ்வாறு அனுகுவது என ஜெர்மனி நீதிமன்றம் திணறிய நிலையில் , தனது காதலனை ஏமாற்றும் நோக்கில் “திருட்டுத்தனமான” செயலை புரிந்து குற்றத்திற்காக ஆறு மாத சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

உடலுறவின் போது ஒரு ஆண் கருத்தடை சாதனத்தை இரகசியமாக அகற்றுவது குற்றமாக கருதப்படும் நிலையில் பெண்ணின் இச்செயலும் இக்குற்றத்திற்குள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க