உடலில் மின்சாரம் பாய்ந்தது பொறியாளர் பலி

இந்தியாவில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையின் பின்புறம் அமைந்துள்ள உபரி நீர் வடிகாலில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த டிப்ளமோ பொறியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் 20 அடி நீள அலுமினிய ஸ்கேலால் அவர் அளவு எடுத்துக்கொண்டிருந்தபோது, மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில், ஸ்கேல் உரசி, உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் குறித்த நபருக்கு அருகே இருந்த மற்றொரு பணியாளர் காப்பாற்ற முயன்றபோது அவரது உடலிலும் மின்சாரம் பாய்ந்து படுகாயமடைந்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளைப் பொலிஸார் விசாரித்துவருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்