உடபுஸ்ஸலாவ பகுதியில் மாயமான சிறுமி வவுனியாவில்

உடபுஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒல்டிமார் தும்பவத்தை தோட்டத்தில் வசிக்கும் தியாகராஜ் சரணியா (வயது – 14) என்ற சிறுமி கடந்த சில தினங்களாக காணமற்போன நிலையில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை வவுனியாவில் மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

 

கடந்த முதலாம் திகதி புதன்கிழமை தந்தை, சிறுமியை கந்தப்பளை – பூப்பனை கீழ் பிரிவு தோட்டத்தில் வசிக்கும் சிறுமியின் பாட்டி வீட்டில் தீபாவளி பண்டிகை முடியும் வரை பாட்டிக்கு துணையாக இருக்க அழைத்து வந்து விட்ட நிலையில் புதன்கிழமை பகல் 11 மணியளவில் தனது தாயிடம் கைபேசியில் உரையாடிய பின்னர் காணாமல் போனதாகபெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

இந்த நிலையில்  வவுனியா – தவசிக்குளம் பகுதியில் மீட்கப்பட்டு வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

</ul