உடன் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு

எரிபொருள் விலை அதிகரித்ததை தொடர்ந்து, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டண விலையை அதிகரிக்க வேண்டுமெனஇதனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

புதிய கட்டணமாக குறைந்தபட்ச விலை 35%  முதல் 40% வரை அதிகரிக்கப்பட வேண்டும்

அதன்படி, புதிய திருத்தத்தின் மூலம் தற்போதைய குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபாவாக அதிகரிக்கப்படும்.

நாளை திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்குள் பேருந்து கட்டணத்தை திருத்தியமைக்காவிட்டால், எதிர்காலத்தில் பேருந்து சேவையில் இருந்து விலகி தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட போவதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.