
உடன் அமுலாகும் வகையில் 54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்
உடன் அமுலாகும் வகையில் பிரதி பொலிஸ்மா அதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உள்ளிட்ட 54 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பணிப்பாளராகச் செயற்பட்ட மகளிர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எஸ் முதுமால குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் 5 பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
