உங்கள் பணத்தை சரியாக பயன்படுத்தியிருந்தால் நீங்கள் வறுமைக் கோட்டின் கீழ் சென்றிருக்க முடியாது!

-கிரான் நிருபர்-

உங்கள் பணத்தை கடந்த ஆட்சியாளர்கள் சரியாக பயன்படுத்தியிருந்தால், நீங்கள் வறுமைக் கோட்டின் கீழ் சென்றிருக்க முடியாது, உங்கள் பணத்தைதான் இந்த நாட்டு அரசியல்வாதிகள் அபிவிருத்திக்கு செலவழிக்கிறார்கள், என அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.

கிராமிய அபிவிருத்தி பணியகத்தினால் செயல்படுத்தப்படும், சமூக வலுவூட்டல் தேசிய திட்டத்தின் முதற்  கட்டமாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில், பின் தாங்கிய முருத்தானை கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட  அக்குறானை மினிமினித்தவெளி ஆகிய இரண்டு  கிராமங்களை,  28 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யும்  திட்டத்தினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அமைச்சர்,

இன்று முறுத்தானை கிராமத்திற்கு மகிழ்ச்சியான நாள், நகரத்திற்கும் கிராமத்திற்கும் பாரிய வேறுபாடு காணப்பட்டுகின்றது

உங்கள் ஊரிற்கு வரும்போது எனக்கு எமது கிராமத்தின் நினைவு வந்தது, இந்த கிராமம் அடுத்த அடுத்த மாதங்களில் பல அபிவிருத்தி காணும் கிராமம் .

மழை காலங்களில் வெள்ளம் பெருகும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் நீங்கள், உங்கள் வாழ்க்கையை உயர்த்த பல கஷ்டங்களை அனுபவித்துள்ளீர்கள்.

பல அரசியல் கட்சிகளை கொண்டு வந்திருந்தீர்கள், கடந்த பொதுத்தேர்தலில் நாம் வெற்றி பெற்றோம், நாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தோல்வியுற்றோம், ஆனால் வடக்கு கிழக்கு தெற்கு என பேதம் இல்லாமல் சேவை செய்கிறோம், நாம் அனைவரும் மனிதர்களே.

உங்கள் பணத்தை ஆட்சியாளர்கள் சரியாக பயன்படுத்தியிருந்தால், நீங்கள் வறுமைக் கோட்டின் கீழ் சென்றிருக்க முடியாது

எமக்கு நல்ல நாடு வேண்டும், அழகான வாழ்க்கை வேண்டும், நல்ல ஆட்சியில் பங்குகொள்ள அனைவரையும் அழைக்கின்றோம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.