உக்ரைன் ஜனாதிபதி- பிரித்தானிய பிரதமர் சந்திப்பு

கடுமையான போர் சூழலுக்கு மத்தியில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சந்தித்துப் பேசினார்.

உக்ரைன் மீது 40இற்கும் மேற்பட்ட நாளாக ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இருதரப்பினரிடையேயான போர் உலகின் பல நாடுகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சந்தித்துப் பேசினார். பிரித்தானியாவுக்கான உக்ரைன் தூதரகத்தில் இந்த சந்திப்பு நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பின்போது ரஷ்யத் தாக்குதல்கள் மற்றும் உலக நாடுகளின் நிலை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ரஷ்யப் படைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிபர் விளாதிமீர் புதினின் இரு மகள்கள் மீது முதல்முறையாக தனிப்பட்ட புதிய தடைகளை பிரித்தானியா விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.