உக்ரைன் அதிபர் உலக நாடுகளின் தலைவர்களிடம் விடுத்துள்ள கோரிக்கை
அணுமின் நிலையம் அருகே தாக்குதல்களை நிறுத்த ரஷ்யாவை கட்டாயப்படுத்துமாறு, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்ற நாடுகளின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைனின் ஒரே அணுமின் நிலையத்தை கடந்த மார்ச் மாதம் ரஷ்யா கைப்பற்றியது.
தற்போது அந்த ஆலைக்கு அருகில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்
அணுமின் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது ஐரோப்பாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும், என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.