
உக்ரைனில் பாரிய மின்துண்டிப்பு
ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்களால் உக்ரைனில் பாரிய மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் மின்னுற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்யா நேற்று மீண்டும் தாக்குதலை நடத்தியிருந்ததை தொடர்ந்து இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது
கடந்த 10ஆம் திகதி முதல் உக்ரைன் மின்னுற்பத்தி நிலையங்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
இந்தநிலையில் இன்று வியாழக்கிழமை நான்கு மணித்தியால மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான முன் ஏற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உக்ரைன் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல் காரணமாக மின்னுற்பத்தி நிலையங்களில் 30 சதவீதமானவை சேதமடைந்துள்ளதாக, உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
