உக்ரைனின் 34ஆவது சுதந்திர தினம் – இன்றும் ரஷ்யா மீது தாக்குதல்
ரஷ்யாவின் குருஷ்க் பகுதியில் உள்ள அணு மின் நிலையம் மீது உக்ரைன் இன்று டிரோன் தாக்குதல் நடத்தியது.
உக்ரைனின் 34ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ரஷ்ய அணு மின் நிலையம் மீதான தாக்குதல் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இந்த தாக்குதலில் அணு மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்தது. உடனடியாக விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம் உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 277ஆவது நாளாக நீடித்துள்ளது.இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். இருப்பினும் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
