உகந்தை மலை ஸ்ரீ முருகன் ஆலய தெய்வானை அம்மனின் வருடாந்த சங்காபிஷேகம்

-தம்பிலுவில் நிருபர்-

உகந்தை மலை ஸ்ரீ முருகன் ஆலய தெய்வானை அம்மனுக்கு வருடாந்த சங்காபிஷேகம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

ஆலய பிரதம குரு சிவ.ஸ்ரீ. சீதாராம் குருகள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உதவிக்குருமார்களாக சிவஸ்ரீ கோவிநாத் சர்மா மற்றும் சிவஸ்ரீ. கோவர்த்தன சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டதுடன் பூஜை நிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.