ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை திசைதிருப்பாதே : த.ம.வி.பு கட்சியினர் கண்டனப்பேரணி
“ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை திசைதிருப்பாதே” “உண்மையை உலகறியச் செய்” என்பதை வலியுறுத்தியும், மேலும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு பகிரங்கப்படுத்தக் கோரியும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆதரவாளர்கள், தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோரால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பில் மாபெரும் கண்டனப் பேரணி நடத்தப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு கட்சி காரியாலயத்தில் இருந்து காலை 9 மணிக்கு ஆரம்பமான இந்த கண்டனப் பேரணியானது மட்டக்களப்பு பொலிஸ் நிலைய சுற்றுவட்டம் வரை சென்று இறுதியில் காந்தி பூங்காவில் காலை 11 மணியளவில் நிறைவடைந்தது.
இந்த பேரணியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சி பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், இளைஞர் அணிச் செயலாளர் சுரோஸ் குமார் உட்பட நூற்றுக்காணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.