
ஈவிரக்கமின்றி நபர் ஒருவர் எரித்துக்கொலை
பதுளை மாவட்டத்தில் ஆண் ஒருவரை தீவைத்து கொலை செய்தமை தொடர்பில் சந்தேக நபரொருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலை சம்பவம் கடந்த 7 ஆம் திகதி எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஊவா கரந்தகொல்ல பிரதேசத்தில் வீட்டில் இடம் பெற்றுள்ளது.
கரந்தகொல்ல, எல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
