ஈலோன் மஸ்க் அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவின் இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து வெனிசுவேலாவில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில், அந்நாட்டு மக்களுக்கு இலவச இணைய சேவையை வழங்கப்போவதாக எலோன் மஸ்க் அறிவித்துள்ளார்.

இது குறித்து தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ள ஈலோன் மஸ்க், “வெனிசுவேலா மக்கள் உலகத்துடன் தொடர்பில் இருக்க ஏதுவாக, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை எவ்வித கட்டணமுமின்றி இலவசமாக வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

வெனிசுவேலாவில் இதுவரை இணையப் பயன்பாட்டிற்கு அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில், மஸ்க்கின் இந்த முடிவு அந்நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.