
ஈரான் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் : யார் அடுத்த ஜனாதிபதி?
கடந்த மே 19ம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிக்கொப்டர் விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து ஈரானில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது.
ஈரானில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட இரு பிரதான வேட்பாளர்களிற்கு இடையில் கடும் போட்டி நிலவுவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
எட்டு மில்லியனிற்கு மேற்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் கடும்போக்காளர் சயீட் ஜலீலிக்கும் மிதவாத வேட்பாளர்மசூட் பெசெக்கியானிற்கும் இடையில் கடும் போட்டி நிலவுகின்றது.
இருவரும் சுமார் 40 வீத வாக்குகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இரண்டு வாக்காளர்களும் 50 வீத வாக்குகளை பெறவிட்டால் வெள்ளிக்கிழமை இரண்டாம் சுற்று தேர்தல் இடம்பெறும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
