ஈரானுடன் பண்டமாற்று ஒப்பந்தம்!
ஈரானுடன் பண்டமாற்று ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் திட்டத்தை இலங்கை தேயிலை சபை அறிவித்துள்ளது.
இதன்படி, எண்ணெய்க்காக செலுத்த வேண்டிய 250 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு பதிலாக, இலங்கை அடுத்த மாதம் ஈரானுக்கு தேயிலை பண்டமாற்று செய்யவுள்ளதாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் நிராஜ் டி மெல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் சர்வதேச செய்தி நிறுவனத்தினடம் கருத்து தெரிவித்த அவர் “இந்த திட்டம் சரியான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது, ஏனெனில் நாடு ஒரு முக்கியமான சந்தையை அணுகும் மற்றும் ஈரானும் இலங்கையும் டொலர்களை நம்பாமல் வர்த்தகம் செய்யலாம். ஒவ்வொரு மாதமும் 5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான தேயிலையை 48 மாதங்களுக்கு அனுப்புவது என்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. எனினும், ஆரம்பத்தில் மாதத்திற்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான தேயிலையை ஏற்றுமதி செய்ய தற்சமயம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்