இ.மி.ச பொறியியலாளர் சங்கத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு

தொழிற்சங்க நடவடிக்கைகளின் மூலம் பொதுமக்களுக்கான தொடர்ச்சியான மின்சார விநியோகத்திற்கு இடையூறு விளைவிக்கும் செயல், இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்க உறுப்பினர்களால் ஏற்படுவதை தடுக்கும் வகையில், கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அணில் ரஞ்சித் இந்துவர, செயலாளர் தம்மிக்க விமலரத்ன உள்ளிட்ட அச்சங்கத்தின் 14 பேர் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை தடுக்கும் வகையில் இத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் மின்சார விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டது.

எனினும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் பல்வேறு விடயங்களை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தது.

அதனைத்தொடர்ந்து ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையைடுத்துஇ குறித்த பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.