இ.போ.ச யாழ்.சாலை ஊழியர்களின் ஒன்றுகூடல் மற்றும் கல்விசார் கௌரவிப்பு!

-யாழ் நிருபர்-

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் யாழ்சாலை ஊழியர் நலன்புரிச் சங்கம் முன்னெடுத்த ஆண்டுவிழாவும் கல்விசார் கௌரவிப்பு நிகழ்வும் கோண்டாவிலில் உள்ள அலுவலகத்தின் செயலாற்றுகைப் பகுதி மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசனும், கௌரவ விருந்தினராக போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளர் கே. கேதீசனும், சிறப்பு விருந்தினராக முன்னாள் சாலைப் பணியாளர்களான கந் தையா துரைசிங்கம், மாணிக்கம் சற்குணம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கோண்டாவில் டிப்போவில் உள்ள வைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசையைத் தொடர்ந்து, விருந்தினர்களும் கல்விசார் கௌரவம் பெற்ற மாணவர்களும் மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தொடர்ந்து கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

நிறைவாக தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி எய்தியோர், க.பொ.த. சாதாரண தரத்தில் 7 ஏ இற்கு மேல் பெற்றோர் மற்றும் உயர்தரப் பரீட்சை அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவானோர் என 17 மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்குமான கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.