
இ.போ.ச பேருந்து – துவிச்சக்கர வண்டி மோதி விபத்து: ஒருவர் பலி
பாணந்துறை நகரத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை, பின்வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று துவிச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது, துவிச்சக்கர வண்டியை செலுத்திச் சென்றவர் படுகாயமடைந்துள்ள நிலையில் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
