இ.போ.ச திருகோணமலை சாலை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு

-திருகோணமலை நிருபர்-

இலங்கை போக்குவரத்து சபையின் திருகோணமலை சாலை ஊழியர்கள் தங்களுக்கு எரிபொருளை வழங்குமாறு கோரி இன்று  புதன்கிழமை பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இப் போராட்டம் இன்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

“அத்தியாவசிய சேவையாளர் எமக்கு எரிபொருள் எங்கே”

“எரிபொருள் கிடைக்கும் வரை தொடர் வேலை நிறுத்தம்”

“அதிகாலையில் பணிக்கு வந்து இரவிலே வீடு செல்லும் நாங்கள் எரிபொருள் பெற்றுக் கொள்வது எவ்வாறு”

“வழங்கு வழங்கு எமக்கு எரிபொருள் வழங்கு”

போன்ற பதாதைகளை ஏந்தியவாறு திருகோணமலை போக்குவரத்து சபை ஊழியர்கள் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.