இ-சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

பொலன்னறுவை – கல்லலெல்ல பகுதியில் ஒலி உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையொன்றில், சட்டவிரோதமான 6 இ-சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 42 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது .

கைப்பற்றப்பட்ட இ-சிகரெட்டுகள் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த இ-சிகரெட்டுகள் அதிக புகையை உருவாக்காது என்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் உள்ள சூதாட்ட விடுதிகளில் இத்தகைய இயந்திர சிகரெட்டுகள் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.