இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் நிறைவு!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று சனிக்கிழமையுடன் முடிவடைகிறது.

அதன்படி, இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் எகிப்து தலைநகரான கெய்ரோவில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இப்பேச்சுவார்த்தை வெற்றியடைந்தால் இரு நாடுகளிலிருந்தும் பணயக்கைதிகள் மற்றும் கைதிகள் பரிமாற்றம் நடைபெறும்.

இரு தரப்பினருக்கும் இடையிலான போர் நிறுத்தம் கடந்த வாரம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால்,இஸ்ரேல் 46 பாலஸ்தீன கைதிகளை விடுவித்த பின்னர் ஹமாஸ் போர் நிறுத்தத்தைக் கைவிடுவதில்லை எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.