இஸ்ரேல் – ஹமாஸ் இடையில் பணயக் கைதிகளை விடுவிக்க இணக்கம்

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான திட்டத்தின் முதல் கட்டத்துக்கு , இணக்கம் காணப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலும், ஹமாஸும் முதல் கட்ட அமைதித் திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இரு தரப்பிற்கும் இடையேயான போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்துவரும் நிலையில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தை மூலம், இரண்டு ஆண்டு காலமாக முன்னெடுக்கப்பட்டுவரும் போருக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படும் என ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதன்மூலம் அனைத்து பணயக்கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள் எனவும், இஸ்ரேல் தங்கள் இராணுவத்தினை திரும்பப் பெறும் என நம்புவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையிலான சமாதானத் திட்டத்திற்கான முதல் கட்டத்துக்கு இணக்கம் காணப்பட்டுள்ளமையை, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வரவேற்றுள்ளார்.