
இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதலில் 90 பேர் உயிரிழப்பு
கடந்த 24 மணி நேரத்தில் காசாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 90 பேர் உயிரிழந்துள்ளதுடன் 177 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இஸ்ரேல் போரினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 410 ஆக அதிகரித்துள்ளதுடன் 71 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளதாக பலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இஸ்ரேலின் இந்த தாக்குதல்களுக்கு இலக்காகி குழந்தைகள் பலர் உயிரிழந்து வருவதுடன் போர் நிறுத்தத்தை கோரி மேற்குலக நாடுகள் தங்கள் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
