இஸ்ரேல் தாக்குதலில் 11 பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் பலி

காசா பகுதியில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 11 பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் அமைப்பு தெரிவித்தது.

அந்த அமைப்பு மேலும் கூறியதாவது,

இஸ்ரேல் விமான தாக்குதல்களில்இ 50 உள்ளூர், சர்வதேச ஊடக அமைப்புகள் குறிவைக்கப்பட்டன.இதன் போது11 பத்திரிகையாளர்கள் பலியானதுடன் 20 பேர் காயமடைந்தனர்.

மேலும் போர் குறித்து செய்தி சேகரிக்க சென்ற 2 பத்திரிகையாளர்களை காணவில்லை. காசா பகுதியில் நிலவும் மின்தடை மற்றும் இணையதள பிரச்சினையால் பத்திரிகையாளர்கள் சரிவர செயல்பட முடியவில்லை. இந் நிலையில் சமூக வலைத்தளங்களில் பத்திரிகையாளர்களுக்கு இஸ்ரேல் அச்சுறுத்தல் விடுக்கிறது. எனவே இப்பிரச்சினையில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.