இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸின் ஆயுதப் பிரிவின் ஊடக பேச்சாளர் உயிரிழப்பு

காசா நகரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் ஆயுதப் பிரிவின் ஊடக
பேச்சாளரான அபு ஒபைடா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், இதனைத் தெரிவித்துள்ளார். எனினும் ஹமாஸ் அவரது மரணத்தை உறுதிப்படுத்தவில்லை.

காசாவில் ஒரு குடியிருப்பு கட்டடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் காயமடைந்ததாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.

காசா நகரத்தின் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட அல்-ரிமல் சுற்றுப்புறத்தில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது .

காசா நகரத்தை முழுமையாகக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.