இஸ்ரேலுடனான போரில் 1,060 பேர் மரணம்: ஈரான் அறிவிப்பு

இஸ்ரேலுடனான போரில் ஈரானில்  1,060 பேர் கொல்லப்பட்டதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் ஈரான் அரசு அறிவித்துள்ளது.

போர் நிறுத்தம் தற்போது அமுலிலுள்ளதால், போரில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஈரான் அரசு ஆய்வு மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் ஈரானின் தியாகிகள் மற்றும் படைவீரர்கள் அறக்கட்டளையின் தலைவர் சயீத் ஒஹாதி கூறுகையில் , இஸ்ரேலுடன் நடைபெற்ற 12 நாள் போரில்   1,060 பேர் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்திருப்பதால், பலி எண்ணிக்கை 1,100 ஆக அதிகரிக்கக் கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.