இஸ்ரேலுக்கு பயணமாகவுள்ள 29 இலங்கைப் பெண்கள்
வீட்டு பராமரிப்பாளர்களாக, 29 இலங்கைப் பெண் பணியாளர்களைக் கொண்ட குழு ஒன்று எதிர்வரும் 7 ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் இஸ்ரேலுக்குப் புறப்பட உள்ளது.
அவர்களுக்கான, விமான பயணச்சீட்டுக்களை உத்தியோகபூர்வமாக வழங்கும் நிகழ்வு நேற்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நடைபெற்றது.
இதனிடையே, இந்த ஆண்டில் இதுவரை, 379 இலங்கை பராமரிப்பாளர்கள் இஸ்ரேலில் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
இதேவேளை, பயிற்சி பெற்ற பராமரிப்பாளர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டு, இரு அரசாங்கங்களுக்கிடையேயான இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ் இதுவரையில் மொத்தம் 2,269 இலங்கையர்கள் இஸ்ரேலில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.