இஸ்ரேலில் குவியும் சடலங்கள்
காஸா பகுதியில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக இஸ்ரேலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த மோதல்கள் காரணமாக நேற்று செவ்வாய்க்கிழமை வரை இரு தரப்பிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3000ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹமாஸ் அமைப்பினரிடமிருந்து காஸா எல்லைப் பகுதிகளை மீளக் கைப்பற்றியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சனிக்கிழமை தாக்குதலுக்குப் பிறகு ஹமாஸை அழிக்கவும், மத்திய கிழக்கை மாற்றவும் இஸ்ரேலின் இராணுவம் தொடர்ச்சியான போரைத் தொடங்கியுள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்திருந்தார்.
ஹமாஸ் அமைப்பினர் காஸா எல்லையில் வசிக்கும் மக்கள் வசிக்கும் பகுதிகள் மீது தரை, வான் மற்றும் கடல் தாக்குதலை நடத்துவதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்