இஸ்ரேலிய தாக்குதலில் ஹவூதி அரசாங்கத்தின் தலைவர் உள்ளிட்ட பலர் பலி
யேமனின் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹவூதி அரசாங்கத்தின் தலைவர் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டதாக யேமனின் ஹவூதி தலைமையிலான அரசாங்கம் உறுதிப்படுத்தியது.
காசா மோதலுடன் தொடர்புடைய பதற்றங்கள் தொடர்ந்து வரும் நிலையில், ஹவூதி இராணுவ தளத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
சனாவில் அண்மையில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 10 பேர் கொல்லப்பட்டதுடன், 90 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.இதனை தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.