
இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் பலி
காசாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போல் மாறுவேடமிட்டு இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த மோதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர்கள் படுக்கையில் படுத்திருந்த போது இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.
இறந்தவர்களில் ஒருவர் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்தவர், மற்ற இருவரும் இஸ்லாமிய ஜிகாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
