இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை : எழுப்பப்பட்ட அபாய சமிஞ்சை ஒலி!

இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து அங்கு அபாய சமிஞ்சை ஒலி எழுப்பப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், லெபனானிலிருந்து இன்று சனிக்கிழமை காலை ஐந்துக்கும் மேற்பட்ட ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

நேற்றிரவு மாத்திரம் 222 ஏவுகணைகள் லெபனானிலிருந்து ஏவப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஹமாசின் ஆயுதப்படையின் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், பாலஸ்தீனிய ஏதிலிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.