இஸ்ரேலின் திட்டங்களுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம்

காசா நகரத்தை “கட்டுப்பாட்டில் கொண்டு வரும்” இஸ்ரேலின் திட்டங்களை ஐக்கிய நாடுகள் சபைக்கான, பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கண்டித்துள்ளனர்.

இருப்பினும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான “சிறந்த வழி” இது மாத்திரமே என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் திட்டமிட்ட தாக்குதல் நகர்வு மிக விரைவில் ஆரம்பிக்கும் என்றும் அது நகரும் என்றும் “காசாவை ஹமாஸிடமிருந்து விடுவிக்கும்” என்றும் நெதன்யாகு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளே பட்டினியால் வாடுகின்றனர்.மாறாக இஸ்ரேல்,காசா மக்களை பட்டினியில் வைத்திருப்பதாக கூறப்படுவதை அவர் மறுத்துள்ளார் .

இதேநேரம் , ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை அவசரக் கூட்டத்தில் இஸ்ரேல் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகள் இந்த திட்டத்தினால், சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளன.

இஸ்ரேலின் இந்த திட்டம், பணயக்கைதிகளை பாதுகாக்க எதுவும் செய்யாது, மேலும் அவர்களின் உயிருக்கு மேலும் ஆபத்தையே விளைவிக்கும் என அந்த நாடுகள் எச்சரித்துள்ளன.

எனினும் அமெரிக்கா இஸ்ரேலைப் பாதுகாக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டுள்ளது.

பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், தமது நாடு அயராது உழைத்து வருவதாக அமெரிக்க தூதர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் இஸ்ரேல் முழுவதும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி அரசாங்கத்தின் திட்டத்தை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.

இந்த திட்டம், பணயக்கைதிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர் .