இஸ்ரேலின் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் மூவர் உயிரிழப்பு

லெபனானின் தெற்கு ஹஸ்பையா பகுதியிலுள்ள தங்குமிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஊடகவியலாளர்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களே இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலிய இராணுவம் காசா முழுவதும் பல தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்களில் கான் யூனிஸ் பகுதியில் சிறுவர்கள் உட்பட 28 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜபாலியா முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 150 பேர் உயிரிழந்துள்ளதாக காஸாவின் சிவில் பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேலிய போர் விமானங்கள் பெய்ரூட்டில் நேற்று மாத்திரம் 12 வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

இந்த தாக்குதல்களில், ஹெஸ்பொல்லாவின் ரத்வான் படையின் தளபதி அப்பாஸ் அட்னான் மஸ்லம் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.