இஸ்மாயில் முத்து முஹம்மது எம்.பி பதவியை இராஜினாமா

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் முஹமது இஸ்மாயில் முத்து உமர் தனது பதவியை இராஜினாமா செய்வதாக பாராளுமன்றத்தில் இன்று உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார் .

சுயவிருப்பத்தின் பேரில் பதவியை இராஜினாமா செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைவர் ஹிஷாட் பத்யூதின் மற்றும் ஆதரவாளர்களுக்கும் இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.