இளையோர் ஒருநாள் கிரிக்கெட்டில் விரான் சமுதித்த சாதனை

இளையோர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ஜப்பான் அணிக்கு எதிரான போட்டியில் 192 ஓட்டங்களை அதிவேகமாகப் பெற்று விரான் சமுதித்த சாதனை படைத்துள்ளார்.

இளையோர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் வீரர் ஒருவர் பெற்ற அதிகபட்ச ஓட்டங்கள் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

விரான் சமுதித்த 143 பந்துகளில் 26 நான்கு ஓட்டங்கள் மற்றும் ஒரு ஆறு ஓட்டம் உள்ளடங்கலாக இந்த ஓட்டங்களைக் குவித்தார்.

அவருடன் இணைந்து திமந்த மஹவிதான முதல் விக்கெட்டுக்காக 328 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர்.