இளைஞர் தினத்தை முன்னிட்டு போதை ஒழிப்பு நடைபவணி
-கிண்ணியா நிருபர்-
இளைஞர் தினத்தை முன்னிட்டு தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி வழிகாட்டுதலுக்கு அமைய ‘போதை ஒழிப்பு தடுப்பு நடபவனி ‘ ஒன்று தம்பலகாமம் பகுதியில் இடம் பெற்றது.
குறித்த விழிப்புணர்வு நடைபவணியானது தம்பலகாமம் கிராம சேவகர் மீராநகர் முஸ்லிம் மாகா வித்தியாலய பாடசாலையில் இருந்து திருகோமமலை கண்டி வீதி பிரதான வீதி வரை நடைபெற்றது.
போதைப் பொருளை ஒழிக்கும் வகையில் பல விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு நடை பவணியாக சென்றனர்.
நிகழ்விற்கு இளைஞர் அபிவிருத்தி அகம் (Aham) நிதி அனுசரனை வழங்கினர்.
இந் நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், இளைஞர் சேவை அதிகாரி ஜாபீர், சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் பாலா ஹம்சன், சுற்றாடல் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், இளைஞர் கழகங்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்