இளைஞன் தற்கொலை

நானுஓயா ரயில் நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஸ்லீப்பர் கட்டைகளை ஏற்றிச் வந்த ரயிலில் தண்டவாளத்தில் தலை வைத்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நீண்ட நேரம் காத்திருந்து யாரும் கவனிக்காத நேரத்தில் நடைமேடையில் இருந்து வேகமாக பாய்ந்து ரயில் பெட்டிகளுக்கு கீழே தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்து ரயில் சக்கரத்தில் சிக்கி இளைஞனின் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த இளைஞன் நுவரெலியா லபுக்கலை பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளங்கோவன் கோவர்தனன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் , தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்