இளைஞனின் உயிரை பறித்த நாய்

வவுனியா – மன்னார் வீதியில் வேப்பங்குளம் பகுதியில் இடம்பெற்ற நேற்று வெள்ளிக்கிழமை இரவு மோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வவுனியா-நெளுக்குளம் பகுதியில் இருந்து வவுனியா  நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் வேப்பங்குளம் பகுதியில் பயணித்த போது நாய் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகி அருகில் இருந்த பாலத்துடன் மோதியுள்ளது.

இவ்விபத்தில் மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த தனுஜன் (வயது 20) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை நெளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்