இளவாலையில் சிக்கிய அழகிகள்

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் சந்தியில் இருந்து இளவாலை ஹென்றியரசர் பாடசாலையை நோக்கி செல்லும் பாதையின் 200 மீட்டர்கள் தொலைவில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இரண்டு விபச்சார அழகிகள் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 42 மற்றும் 35 வயதுடைய இரு அழகிகளே கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர், சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட பகுதிக்கு அண்மையில் வசித்து வருகின்றார். இவரே இந்த விடுதியை பொறுப்பாக இருந்து நடாத்தி வருகின்றார் என தெரியவருகிறது.

இந்த விடுதிக்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்த அழகிகள் சுழற்சி முறையில் வருகை தருவதாகவும், இதனால் அங்கு கலாச்சார சீர்கேடு நடப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்த இளவாலை பொலிஸார் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.