
இளவரசி கேத் மிடில்டன் அரச கடமைகளில் இருந்து விலகத் தீர்மானம்
பிரித்தானிய இளவரசி கேத் மிடில்டன் அரச கடமைகளில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளார்.
42 வயதான இளவரசி கேத் மிடில்டனுக்கு கடந்த ஜனவரி மாதம் வயிற்றுப் பகுதியில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அதன் பிறகு அவர் பொது வெளியில் தோன்றுவதனைத் தவிர்த்து வந்தார்.
இதனால் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதேவேளை கடந்த மார்ச் மாதம் அவர் காணொளியொன்றை வெளியிட்டு, தனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதை உறுதி செய்திருந்தார்.
இந்நிலையில், தற்போது இளவரசி கேத் மிடில்டன் அரச கடமைகளில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்