இளம் யுவதிகள் மத்தியில் ஐஸ் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு
இளம் யுவதிகள் மத்தியில் ஐஸ் (மெத்தாம்பேட்டமைன்) போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள சில அழகு நிலையங்கள் மூலம் பல பெண்கள் மற்றும் இளம் பெண்கள் போதைப்பொருள் பாவனைக்கு ஈர்க்கப்படுகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாடசாலை மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாவதை தடுப்பதற்காக குளியாப்பிட்டிய கலால் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உதவி ஆலோசகர் லக்மி நிலங்கா கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்படி, தற்போது சிகிச்சை பெற்று வரும் பாடசாலை மாணவிகள் மற்றும் யுவதிகளில் பலர் ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையாகி , அழகு நிலையங்களில் இருந்து இவற்றை கொள்பனவு செய்து பயன்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
குருநாகல் மாவட்டத்தில் ஐஸ் போதைப் பொருள் பரவலாகப் பயன்படுத்தப்படுவதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.